1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (12:29 IST)

சினிமாவில் திறமைலாம் தேவையில்ல.. அது இருந்தா போதும்! - ஓப்பனாக சொன்ன பிரபல நடிகை!

Rimi Sen

சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும், பட வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து பிரபல நடிகை ரிமி சென் பேசியுள்ளார்.

பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், அஜய் தேவ்கன், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களோடு பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஒரு சமயம் திரை உலகிலிருந்து காணாமல் போனார்.

தனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்த ரிமி சென் “சினிமாவில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்கள் கிடைக்கவில்லை. சினிமாதுறையில் பிரபலமான நடிகர்களுடன் நடித்தப்போதும் எனக்கு பெரிய தொடர்புகள் இல்லை. 
 

சினிமாவில் திறமையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நடிப்பு திறமைக்கு மதிப்பு இல்லை. பட வாய்ப்புகள் வேண்டுமென்றால் எல்லாரையும் காக்கா பிடிக்க தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அப்படி செய்ய தெரியாது. நண்பராக என்னுடன் இருந்தவரே என்னிடம் பணம் ஏமாற்றினார்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K