1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (15:52 IST)

அவர் படத்தில் நடிக்கக்கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவிற்கு அவரது ரசிகர்களே பிரபல இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்கக்கூடாது என்று எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 


 
நடிகை தீபிகா படுகோனேவிற்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தமிழில் அவர் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ்பெற்றார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் தீபிகா கோலிவுட் ரசிகர்களிடையே பேசப்பட்டார். 


 
இதற்கிடையில் கடந்த நவம்பர் 14ம் தேதி பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பல படங்ககளில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 


 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், பிரபல பாலிவுட் பட இயக்குனரான லுவ் ராஜன் பட கம்பெனியின் வாசலில் தீபிகா படுகோனே மற்றும்  ரன்பீர் கபூர் இருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட தீபிகாவின் ரசிகர்கள்  இது எங்கள் தீபிகா இல்லை (#NotMyDeepika) என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி லுவ் ராஜன் படத்தில் தீபிகா படுகோனே நடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 
காரணம், இயக்குனர் லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்து மீடூ புகாரில் சிக்கியவர். அப்படியிருக்கும் போது பாலியல் தொல்லைக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் தீபிகா படுகோனே அவரது இயக்கத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,  ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தீபிகா இயக்குனர் லுவ் ராஜன் படத்தில் இருந்து விலகுவாரா? அல்லது ரசிகர்கள் எதிர்ப்பை மீறி நடிப்பாரா என்பதுபற்றி இதுவரை தீபிகா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.