ராதை, சீதையாக அவதாரமெடுக்கும் ஆயுஷ்மான்: ட்ரீம் கேர்ள் கலக்கல் ட்ரெய்லர்

dream girl
Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (20:04 IST)
ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆயூஷ்மான் குரானாவின் புதிய படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது.

தனது ஒவ்வொரு படத்தையும், கதாப்பாத்திரத்தையும் மிகவும் வித்தியாசமாக தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாக ஹிட் அடிக்க செய்பவர் ஹிந்தி நடிகர் ஆயூஷ்மான் குரானா.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆர்ட்டிக்கிள் 15 என்ற திரைப்படம் சர்வதேச அளவில் பலரால் சிலாகித்து பேசப்பட்டது. சிறுபான்மையின அடக்குமுறைக்கு எதிராக போராடும் பிராமண காவல் அதிகாரியாக அதில் நடித்திருப்பார் ஆயுஷ்மான்.

இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் இவருக்கு “அந்தாதுன்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் அறிவித்திருக்கிறார்கள். கண் தெரியாததுபோல் போலியாக நடித்து கடைசியில் உணமையாகவே கண் தெரியாமல் போய்விடும் கதாப்பாத்திரமாக அதில் நடித்திருந்தார் ஆயுஷ்மான்.

dream girl

இப்படி படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஆயுஷ்மான் தற்போது “ட்ர்ரிம் கேர்ள்” படம் மூலமாக நாடகத்தில் பெண் வேடமிடும் ஆண் கலைஞராக நடித்திருக்கிறார். நுஸ்ரத் பச்சாரியா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ராஜ் சாண்டில்யா இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் காமெடி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நாடகத்தில் நடித்து பனம் ஈட்ட முடியாததால், பூஜா என்ற பெயரில் பெண் குரலில் பேசி ஆண்களை மகிழ்விக்கும் பணியை செய்கிறார். நாளுக்கு நாள் பூஜா ஒரு பெண் என நினைத்து இவருடன் பல ஆண்கள் பேச தொடங்குகிறார்கள்.

கடைசியாக யாருக்கு பூஜா என அந்த ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். பூஜா யார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்க முயற்சி செய்யும் அவர்களிடமிருந்து ஆயுஷ்மான் தப்பித்தாரா? என்பதை விருவிருப்பான காமெடி கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். ட்ரெய்லரில் ஆங்காங்கே புராதான நாடகங்களை பகடி செய்யும்படியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. என்றாலும் இது ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

காமெடி தெறிக்கும் ட்ரீம் கேர்ள் திரைப்படத்தின் ட்ரெய்லரை இங்கே காணலாம்.


இதில் மேலும் படிக்கவும் :