திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By CM
Last Updated : சனி, 12 மே 2018 (18:41 IST)

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘அர்ஜுன் ரெட்டி’

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’, ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்திருந்தார். சந்தீப் வங்கா படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களைக் கவர்ந்த இந்தப் படம், வசூலில் சக்கை போடு போட்டது.
 
எனவே, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. ஹிந்தியில் அர்ஜுன் கபூர் அல்லது ரன்வீர் சிங் நடிக்கலாம் எனப் பேச்சுகிளம்பியது. சந்தீப்பே ஹிந்தியிலும் இயக்க, முரத் கெதானி தயாரிக்க இருக்கிறார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா கேரக்டரில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை, சந்தீப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழில் இந்தப் படம் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. பாலா இயக்க, த்ருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.