பேண்ட் அணியாததால் பிரபல நடிகையின் தங்கை ஓட்டலில் இருந்து வெளியேற்றம்
பிரபல தமிழ் நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி பேண்ட் அணியாமல் ஓட்டலுக்கு சென்றதால் வெளியேற்றப்பட்டார்.
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாமி கவுதம். இந்தி, தெலுங்கு மொழிகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தற்போது தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் நடந்து வருகிறது. இதில் பங்குகொள்ள யாமி கவுதம் தனது தங்கை சுரிலியுடன் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் அங்குள்ள பகுதிகளை சுற்றி பார்த்தபா ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது சுரிலி பேண்ட் அணியாமல் மேலாடை மட்டும் அணிந்து சென்றுள்ளார். இதனால் அந்த ஓட்டல் நிர்வாகம் சுரிலியை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.