வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (12:40 IST)

அதிக பாலோவர்ஸ் பெற பிகினி உடை போட்டோவை பகிர்ந்த நடிகர் அமிதாப் பச்சன்!

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் அமிதாப் பச்சன் 1969 ஆம் ஆண்டு சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதை தொடர்ந்து பல்வேறு மெகா ஹிட் படங்களில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரேஞ்சிற்கு உயர்ந்து நிற்கிறார்.

இவர் சினிமா துறை படைத்த சாதனைகளும், வாங்கிய விருதுகளும் ஏராளம். இப்பேற்பட்ட ஜாம்பவானை நடிகராக கொண்ட இந்திய மண்ணே பெருமைப்படுகிறது. புகழின் உச்சத்தில் இருந்தாலும் தற்பெருமை இன்றி தனது சாந்தமான குணத்தால் அனைவருக்கும் ஏத்துக்கட்டாக விளங்குகிறார் . இவர் 1973ம் ஆண்டு  நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டு ஷ்வேதா நந்தா என்ற மகளும், அபிஷேக் பச்சன் என்ற மகளும் பெற்றேடுத்தனர். தற்போது முன்னணி நடிகராக விளங்கிவரும் மகன் அபிஷேக் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டு மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " பிகினி உடையில் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது 1983ம் ஆண்டு வெளியான "மஹான்" படத்தின் போது எடுக்கப்பட்டது . இன்றுடன் இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் ஆகிறது என பதிவிட்டுள்ளார். நடிகர் அமிதாப் பச்சனின் இந்த அரிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.