1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (07:27 IST)

தம்பி அந்த கேமிராவை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்க: அஜித் கூறியது யாரை தெரியுமா?

தல அஜித் வெளியிடங்களுக்கு செல்லும்போது அவரை விரட்ட்டி விரட்டி போட்டோ, வீடியோ எடுப்பது அவரது ரசிகர்களின் வழக்கமாகிவிடுகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அஜித்துடன் புகைப்படம் எடுக்க சான்ஸ் கிடைத்தால் மிஸ் செய்வதில்லை.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அஜித் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு  சென்றபோது அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அவரை புகைப்படம் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அஜித் 'ஸ்கூல்ல போட்டோ எடுக்க கூடாது தப்பு, கண்டிப்பா நான் இன்னொரு நாள் சொல்லி அனுப்புறேன் அப்புறம் எடுக்கலாம் ஓகே தன்க் யூ'; என கனிவாக கூறுகிறார். அப்படி இருந்தும் அந்த நபர் தொடர்ந்து எடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

எந்தவித கோபமும் இல்லாமல் இந்த அளவுக்கு பொறுமையாக அஜித் கூறிய இந்த பாணி அனைவரையும் கவர்ந்துள்ளது. தன்னால் யாருக்கும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் அக்கறையே அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது.