ஒரே போனில் ஐந்து கேமிராக்கள்: எல்.ஜி. நிறுவனத்தின் அசத்தல் போன்

Last Modified வியாழன், 4 அக்டோபர் 2018 (22:01 IST)
பின்கேமிரா, செல்பி கேமிரா என இரண்டு கேமிராக்கள் கொண்ட போன்களை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் ஒரே ஸ்மார்ட்போனில் ஐந்து கேமிராக்களை கொண்ட புதிய மாடல் போன் ஒன்றை எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ என்ற பெயரில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் புதிய பிளாட்டினம் கிரே, மொராக்கன் புளு மற்றும் கார்மைன் ரெட் ஆகிய 3 நிறங்களில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்பக்கம் இரண்டு செல்பி கேமிரா மற்றும் பின்பக்கம் மூன்று கேமிராக்கள் இந்த புதிய மாடலில் உள்ளது. செல்பி கேமிரா 5எம்பி மற்றும் 8எம்பி தரத்திலும், பின்கேமிரா 16எம்பியில் ஒரு கேமிராவும் மற்ற இரண்டு கேமிராக்கள் 12எம்பியிலும் உள்ளது


6.4 இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம், மற்றும் 3300 எம்.ஏ.எச் பேட்டரி தரமுள்ள இந்த போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.


இதில் மேலும் படிக்கவும் :