வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (10:59 IST)

புற்றுநோய் குறித்து மக்களிடம் தவறான புரிதல் இருக்கு: நடிகை ஐஸ்வர்யா ராய்

பெண்களின் புற்றுநோய்க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். 
உலக அழகி ஐஸ்வர்யா ராய், இந்திய சினிமாக்களில் ஒரு மைல்கல்லாக திகழ்கிறார். கடந்த 20 வருடங்களில் இந்திய சினிமா வரலாற்றில் இவர் எட்டிய உயரம் அசாதரணமானது. எந்த மொழியிலும் இவரது புகழ் தெரியும். திருமணத்துக்கு பிறகு அவ்வப்போது சமூக சேவையில் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 
 
மும்பையில் நடைபெற்ற 'சோல் ஸ்டிர்ரிங் 2018' என்ற பெண்களின் புற்று நோய்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் புற்று நோயாளிகளுக்கு நம்பிக்கை விதைக்கும் வண்ணம் சிறப்பு உரையாற்றினார். அப்போது ஐஸ்வர்யா ராய் கூறுகையில், "புற்றுநோய் குறித்து தவறான கருத்துக்களும், தவறான நம்பிக்கைகளும்  நம் நாட்டு மக்களிடம் இருக்கிறது. இன்றைக்கும் கூட  அவர்கள் புற்றுநோய் ஒரு தொற்றநோய் நம்மையும் தாக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புற்றுநோய் வர வேறு பல காரணங்கள் உள்ளன. புற்று நோய் எதனால் வருகிறது, அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது  குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புற்றுநோய் குறித்து படித்தவர்கள், பாமர மக்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.  ரெகுலராக பரிசோதனைகளை செய்வதன் மூலம் புற்றுநோயை ஆரம்பித்திலேயே கண்டறிந்தால், புற்றுநோயால் பாதித்தவர்களை குணப்படுத்த இயலும். பெண்களுக்கு  ஏற்படும்  புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்த வாய்ப்பாக இருக்கும். இதுவே புற்றுநோய் ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு கூறினார்