ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (12:11 IST)

முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன சேலை....ஐஸ்வர்யா ராய்யின் திருமண புடவை விலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு முன்னர் நடிகர் சல்மான் கானை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார். 
 
தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் திருமண புடவை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 
 
முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன அந்த சேலை சிகப்பு நிற தங்கத்தாலும்,  விலையுயர்ந்த படிக கற்களினாலும் உருவாக்கப்பட்டதாம். அந்த சேலையின் மதிப்பு அப்பவே ரூ. 75 லட்சமாகும். தற்போது அதன் விலை ரூ. 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அந்த புடவையை அபு ஜானி, சந்தீப் கோஸ்லா ஆகிய இருவரும் வடிவமைத்தார்கள். மேலும் ஆடை ஜொலிக்க வெள்ளை மற்றும் நீலம் போன்ற துல்லிய வண்ண கற்களை பயன்படுத்தி ஆடையை பளபளப்பாக மாற்றி ஜொலிக்கச் செய்தார்கள்.