1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Actor Sudeep Saved actress Jayashree Ramaiah

முகநூல் Live -ல் தற்கொலை முயற்சி - நடிகையை விரைந்து காப்பாற்றிய சுதீப்!

Actor Sudeep
இந்த கொரோனா லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்தே வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருப்பதால் மக்கள் பலரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் தனிப்பட்ட தங்களது பிரச்னைகளை சமாளிக்கமுடியாமல் தற்கொலை முயற்சிகளை எடுக்கின்றனர். அப்படித்தான் கடந்த மாதம் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க தற்கொலைக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

அந்தவகையில் கன்னட பிக்பாஸ் நடிகை  ஜெயஸ்ரீ ராமையா அண்மையில் முகநூல் லைவ் மூலம் ரசிகர்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தனக்கு தனிப்பட்ட பிரச்னைகள் நிறைய இருப்பதாக கூறிய அவர் மன அழுத்தத்தில் இருந்தால் தன்னால் மீண்டு வரமுடியவில்லை என வருத்தத்துடன் கூறினார். இதனால் இந்த உலகுக்கும் மன அழுத்தத்துக்கும் குட்பை சொல்லி விலகி செல்கிறேன் எனக்கூறி அந்த வீடியோவை முடித்துள்ளார்.

இதையடுத்து  ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் சில நிமிடங்களில் அந்த லைவ் வீடியோவை நீக்கிவிட்டு மற்றொரு பதிவில், மிக்க நன்றி சுதீப் சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி. உங்களை பீதிக்குள்ளாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார் தெரிவித்தார். இத மூலம் சுதீப் விரைந்து அவரை காப்பாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
தனுஷ் பிறந்தநாளில் வெயிட்டாக வந்திறங்கிய "ஜகமே தந்திரம்" ரகிட ரகிட சிங்கிள் ட்ராக்!