நான்கு ஸ்டார்களை வென்ற ஹாலிடே

Ravivarma| Last Modified புதன், 4 ஜூன் 2014 (15:37 IST)
முருகதாஸின் இரண்டாவது இந்திப் படம் ஹாலிடே - ஏ சோல்ட்ஜர் இஸ் நெவர் ஆஃப் டூட்டி வரும் 6ஆம் தேதி வெளியாகிறது. துப்பாக்கியின் ரீமேக்கான இது நிச்சயம் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். நூறு கோடி வசூலிப்பது நிச்சயம். இருநூறு கோடியை தாண்டுமா என்பதுதான் கேள்வி.
 
படம் நாளை மறுநாள் வெளியானாலும் படத்தின் விமர்சனம் பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விமர்சனம் எழுதியவர் இந்தியின் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.
படத்தின் கதை, திரைக்கதை, சண்டைக் காட்சிகள், நடிப்பு என அனைத்தையும் தனது விமர்சனத்தில் சிலாகித்துள்ளார். பொதுவாக இந்திப்பட விமர்சகர்கள் தென்னிந்தியாவிலிருந்து செல்லும் நபர்களை கண்டு கொள்வதில்லை. மாறாக இந்த விமர்சனம் நெடுக முருகதாஸ் பாராட்டப்பட்டுள்ளார். முக்கியமாக அவரின் திரைக்கதை.
 
ஸ்பெஷல் 26 படத்துக்குப் பிறகு இதுதான் அக்ஷய் குமாரின் நடிப்பை புதுப்பித்திருக்கும் படம். 
 
ஹாலிடேக்கு ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் தந்துள்ளார் தரண் ஆதர்ஷ். இந்த விமர்சனம் ஹாலிடே மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுவாக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :