உலகக் கோப்பை : பிரேசிலுக்கு சோதனை மேல் சோதனை

Geetha Priya| Last Updated: ஞாயிறு, 13 ஜூலை 2014 (10:39 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் மேலும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
 
பல மில்லியன் டாலர் செலவில் இந்தப் போட்டியை நடத்திய பிரேசில், தாம் ஆடிய கடைசி ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில், நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டி பிரேசிலா நகரில் நடைபெற்றது.
 
ஜெர்மனி அணியிடம் 7-1 எனும் கணக்கில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரேசில், இழந்த தமது மானத்தை மீட்குமா, அல்லது அர்ஜெண்டினாவிடம் பெனால்டி முறையில் தோற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறாமல் போன நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடிக்குமா என்பதே, போட்டிக்கு முன்னர் ரசிகர்களிடையே பெரிதும் விவாதிக்கப்பட்டது.
 
பிரேசில் அணியின் தலைவர் தியாகோ சில்வா செய்த ஒரு தவறால், ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில், நெதர்லாந்துக்கு ஒரு பெனால்டி கிடைக்க அதை மூன்றாவது நிமிடத்தில், அணியின் தலைவர் ராபன் வான் பெர்சி கோலாக மாற்றினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :