முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ராஜரீக ரீதியிலான உறவுமுறைகள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உறவுமுறைகள் அதிகரித்தன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான பிரச்னைகளில், இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்தது. இது போக அமெரிக்காவிடமிருந்து அதிநவீன போர்க் கருவிகளையும் இந்தியா பெற்று வந்தது. இந்த விவகாரங்களில் இருநாட்டுக்கு மத்தியிலான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், இந்தியப்...