போர் என்பது வரிப்பணத்தில் தற்கொலை - வைரமுத்து

vairamuthu
Last Modified வெள்ளி, 1 மார்ச் 2019 (13:50 IST)
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த 26 ஆம் தேதி  காஷ்மீர் ஆக்கிரமிப்பில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது  இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். 
இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி இந்திய விமானிகள்  பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய விமான தாக்குதலில் பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஆனால்  துரதிஷ்ட வசமாக இந்திய விமானி அபிநந்தன்  சென்ற விமானத்தின் மீது பாகிஸ்தான் ராணிவத்தினர் நடத்திய தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டில் விழுந்தார்.  அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. தற்போது உலக நாடுகளின் உந்துதல்களால் அபிநந்தனை பாகிஸ்தான் விடுப்பதாக அறிவித்தது.

 
இந்நிலையில் இது குறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருகிறார். 
 
அதில் ’’அபிநந்தன் விடுதலைக்குப் பிறகு இருநாடுகளில் எந்த நாடு போர் தொடுக்கக் கருதினாலும் இரு நாடுகளுக்கும் இழப்புதான். போர் என்பது வரிப்பணத்தின் தற்கொலை. இவ்வாறு பதிவிட்டிரருக்கிறார்.’’
vairamuthu
 


இதில் மேலும் படிக்கவும் :