வடகொரியா மீதான கூடுதல் தடைகள் - உடனடியாக விலக்கிய டிரம்ப்

trumph
Last Updated: சனி, 23 மார்ச் 2019 (09:15 IST)
வடகொரியா மீது அமெரிக்கா விதித்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் பெரிய அளவிலான தடைகள் விலக்கப்படும் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
 
வடகொரியா மீதான தடைகளை மீறி அந்நாட்டுக்கு நிலக்கரியை அனுப்பிய இரு சீன கப்பல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை அவர் குறிப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.
 
பன்னாட்டு பொருளாதார தடைகளை மீற வடகொரியாவுக்கு அந்த நிறுவனங்கள் உதவுவதாக அமெரிக்கக் கருவூலம் கூறியிருந்தது.
 
அவற்றின் மீதான தடை அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே தென்கொரியா உடனான பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வடகொரியா தமது அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
 
அமெரிக்காவின் தடைகளுக்கும் இந்த நடவடிக்கைக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.

இதில் மேலும் படிக்கவும் :