மருத்துவப் படிப்புகளுக்கு இனி நீட் தேர்வு - மத்திய அரசு
கடந்த 2013 ஆம் ஆண்டு நீட் தேர்வு அரசியலமைப்பு எதிரானது என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு இத்தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் 2017 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தியது.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றனர். அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூட நீட் தேர்வு தமிழகத்தில் விலக்கப்படும் எனக் கூறினர். இருப்பினும் இந்த ஆண்டு நீட் தேர்வு இந்தியா முழுவதும் கொரோனா காலத்திலும் நடந்துமுடிந்தது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது:
அதில், மருத்துவப் படிப்பைப் போன்று 2021 ஆம் ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கு இனி நீட் தேர்வு கட்டாயம் எனவும் அதேபோல் சித்தா , ஆயுர்வேதம், யுனானி , ஹோமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.