1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 13 ஜூன் 2015 (18:55 IST)

மேலாடையின்றி தோன்றிய மாடலை மணக்கிறார் ஸ்வீடிஷ் இளவரசர்

ஸ்வீடன் இளவரசர் சாமானியரான தொலைக்காட்சி நடிகையை மணக்கிறார்.
 
தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆடம்பரமாக நடைபெறும் நிகழ்வு ஒன்றில் இளவரசர் கார்ல் பிலிப், சோஃபியா ஹெல்க்விஸ்டை கரம்பிடிக்கிறார்.
 
இளவரசரை மணக்கவுள்ள சோஃபியா முன்னர் மேலாடையின்றி தோன்றிய மாடலாக இருந்தவர்.
 
அதுமட்டுமன்றி யோகா பயிற்றுவிப்பாளராகவும் இருந்த அவர் பின்னர் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார்.
 
ஸ்வீடனில் அரச குடும்பத்துக்கான ஆதரவு குறைந்து வருகிறது என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தாலும், ஆயிரக்கணக்கான நலம் விரும்பிகள் இந்தத் திருமணத்துக்காக தெருவோரங்களில் குவிந்துள்ளனர்.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த ஜோடி முதல் முறையாக உணவு விடுதி ஒன்றில் சந்தித்தினர், பின்னர் அவர்களது காதல் மலர்ந்து இப்போது திருமணம் வரை வந்துள்ளது.
 
மேலாடை இல்லாத ஒரு மாடலாக தான் இருந்து பின்னர் அரைகுறை ஆடையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினாலும், அதிலிருந்து விலகி பல ஆண்டுகள் ஆகின்றன என சோஃபியா ஹெல்க்விஸ்ட் கூறுகிறார்.
 
எனினும் தனது கடந்த காலம் குறித்து வருத்தப்பட வேண்டியது இல்லை என்றும், அந்த அனுபவங்களே தன்னை இப்போது இருக்கும் நிலைக்கு உருவாக்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்ரிக்காவில் சமூகத்தில் பின் தங்கியுள்ள பிள்ளைகளின் நலன்களுகான அறக்கட்டளை ஒன்றையும் அவர் ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார்.
 
நியூயார்க்கில் கணக்கியல் படித்துள்ள அவர் பின்னர் யோகா ஆசிரியராகவும், விடுதியில் உணவு பரிமாறுபவராகவும் பணியாற்றியுள்ளார்.
 
ஸ்வீடிஷ் மணிமகுடத்துகுரிய வரிசையில் இளவரசர் பிலிப் மூன்றாவது இடத்தில் உள்ளார்.