வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (00:38 IST)

தாலிபன் ஆட்சியை இலங்கை ஏற்கக்கூடாது - ரணில் விக்ரமசிங்க

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

தாலிபன், ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக இலங்கை அரசு தரப்பு கூறுகிறது.

பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.