வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (15:02 IST)

கூடுதல் தடைகள் உறவுகளை பாதிக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்கா தங்கள்மீது மேலும் தடைகளை விதிக்கும் நோக்கில் புதிதாக இயற்றியுள்ள சட்டமானது, இருநாட்டு உறவுகளை நீண்டகாலத்துக்கு பாதிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாஃபராவ் எச்சரித்துள்ளார்.


 
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரியுடனான தொலைபேசி உரையாடல் ஒன்றிலேயே, லாஃபராவ் இந்த எச்சரிக்கையை விடுத்தார் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள், கச்சா எண்ணெயின் வீழ்ச்சி அகியவை இணைந்து ரஷ்ய பொருளாதாரத்தை பெரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
 
இதனால் நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பும் எதிர்பாராத வகையில் விரைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 
இதனிடையே ரஷ்யாவுடன் பல விவகாரங்களை கையாளும்போது, ஐரோப்பியர்கள் தமது சுய நம்பிக்கையை மீண்டும் பெற்று, தமது பலத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பியக் கவுன்சிலின் புதிய தலைவர் டொனால்ட் டஸ்க் கோரியுள்ளார்.


 
பதவியேற்ற பிறகு அவர் பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் உச்சிமாநாட்டில் உரையற்றிய அவர், ரஷ்யா மீதான தடைகள் தளர்த்தப்பட மாட்டாது என எச்சரித்தார்.
 
ரஷ்யா நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும், தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும், அவை இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் மேலும் கடுமையாகவேச் செய்யும் எனவும் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார்.