ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2016 (18:36 IST)

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சீன வீரர் தங்கம் வென்று பதிலடி

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் சீன நீச்சல் வீரர் சுன் யாங் 200 மீட்டர் சுதந்திர பாணி (ஃ பீரி ஸ்டைல்) நீச்சல் போட்டி பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
 

 
சுன் யாங் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு ஏமாற்றுவதாக, ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஃ பீரி ஸ்டைல் நீச்சல் போட்டி பிரிவில் தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மாக் ஹோர்டன் வெளிப்படையாக குற்றம்சாட்டி இரண்டு நாட்களுக்கு பிறகு, சுன் யாங் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த குற்றச்சாட்டு குறித்து மாக் ஹோர்டன் மன்னிப்பு கோரவேண்டுமென்று. சீன நீச்சல் விளையாட்டுப் பிரிவு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
 
இதனிடையே. ஆண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில், அமெரிக்க நீச்சல் வீரர் ரியான் மர்பி தங்கம் வென்றார். பெண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில், முதலாவதாக வந்த ஹங்கேரி வீராங்கனை கட்டின்கா தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் அவர் வென்ற இரண்டாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.