பாதிரியாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோருடன் போப் இன்று சந்திப்பு

பாதிரியாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோருடன் போப் இன்று சந்திப்பு
Last Modified திங்கள், 7 ஜூலை 2014 (14:30 IST)
ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களை போப் பிரான்ஸிஸ் இன்று திங்கட்கிழமையன்று சந்திக்கிறார்.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அவர் தினசரி நடத்தும், தனியான காலை நேர வழிபாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவருடன் பேசுவார்கள்.
 
போப் பிரான்ஸிஸ் 16 மாதங்களுக்கு முன்னர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இத்தகைய சந்திப்பு நடப்பது இதுவே முதன் முறையாகும்.
 
இது போல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியர்களின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தான் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் போப் பிரான்ஸிஸ், இதைக் கையாள்வது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியிருக்கிறார்.
 
ஆனால் பாதிக்கப்பட்டவர்களை முன்பே சந்திக்காதது குறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன.
 
குற்றம் செய்யும் பாதிரியார்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்தும் பரிசிலிக்க குழு ஒன்றை போப் அமைத்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :