1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 12 நவம்பர் 2014 (21:58 IST)

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான்.
 
சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர்.
 
இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளியினூடாக பறந்து கொண்டிருக்கையில் இந்த நுட்பமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.