வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (20:49 IST)

'அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை'

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் மருத்துவமனையின் மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் குறித்து ஜெனிவா சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச உண்மை அறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று மருத்துவ தொண்டர் அமைப்பான எம்.எஸ்.எஃப் கேட்டிருக்கிறது.
 

 
போர் நடத்தப்படுவதை ஒழுங்குபடுத்தும் அந்த சாசனத்துக்கு முற்றிலும் முரணாக அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டாக்டர். ஜோன் லியூ கூறியுள்ளார்.
 
அந்த குண்டுத்தாக்குதலில் 10 நோயாளர்களும், எம்.எஸ்.எஃபின் பணியாளர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர்.
 
இது குறித்து ஆப்கானும் அமெரிக்காவும் கூறும் விசயங்களில் உள்ள ஸ்திரமின்மை, அங்கு நடத்தப்படக்கூடிய சர்வதேச இராணுவ புலன்விசாரணை, அந்த நாடுகளில் தங்கியிருக்க முடியாது என்பதை காண்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அந்தக் குண்டுத்தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட ஒன்று என்று செவ்வாயன்று ஆப்கானில் உள்ள அமெரிக்க தளபதி கூறியிருந்தார்.