நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) ஆரோக்கியமற்றதாக கருதப்பட்டதால் நெய் முக்கியத்தும் இழந்தது. ஆனால் இப்போது, இந்தியர்கள் தங்களுடைய சமையலில் முன்பு முக்கியமான அங்கமாக இருந்த பொருட்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்திய உணவு எழுத்தாளரான கல்யாண் கர்மாகர் தனக்குப் பிடித்த பல பெங்காளி உணவு வகைகளில் நெய் சேர்க்கப்படுவதை குறிப்பிட்டு அவற்றின் சுவையை தெரிந்துகொள்ளத் தூண்டுகிறார். நெய் பாத்துக்காக (Ghee bhaat) வேகவைத்த சாதத்துடன் வறுத்த கட்லா மீனை (Indian carp)...