வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By bala
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (14:57 IST)

பொருளின்றி, நீளமாக பேசுவது அல்சைமரின் தொடக்கமாக இருக்கலாம்

பொருளின்றி பேசுவதும், நிகழ்வுகளை மிக நீளமாக விவரிப்பதும் முதுமையில் நினைவிழப்பை ஏற்படுத்துகிற அல்சைமர் நோயின் தொடக்கத்தை காட்டும் அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 

ஆரோக்கியமானோரிடமும், முதுமையில் ஏற்படும் நினைவிழப்பை முன்னரே சுட்டிக்காட்டுகின்ற, அறிவுதிறனில் லோசன குறைபாடு உடையோரிடமும் நடத்தப்பட்ட சிறியதொரு ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வந்துள்ளது. இந்த ஆய்வின்போது, மூன்று குறிப்பிட்ட சொற்களோடு சுருக்கமான வாக்கியத்தை உருவாக்க அறிவுதிறனில் லோசன குறைபாடு உடையோர் தடுமாறினர்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக அறியப்படும் புத்தக ஆசிரியர்களான எரிஸ் மர்டோக் மற்றும் அகதா கிறிஸ்டியேவின் படைப்புக்களையும் இந்த ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச் டபியூ புஷ் மற்றும் அதிபர் பணிக்காலத்திற்கு பிறகு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய 6 ஆண்டுகளில், அல்சைமர் நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட ரோனால்ட் ரேகனும், வெள்ளை மாளிகையில் வைத்து வழங்கிய செய்தியாளர் சந்திப்புக்களை ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அல்சைமர் நோயை அதனுடைய தொடக்கத்திலேயே கண்டறிய இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் என்று நம்புவதாக இதனை வழிநடத்திய ஆய்வாளர் ஜெனட் கோஹென் ஷீர்மான் தெரிவித்துள்ளார்.