'அமெரிக்காவை இன்னமும் நம்ப முடியவில்லை' - காஸ்ட்ரோ

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 27 ஜனவரி 2015 (17:25 IST)
கியூபாவும் அமெரிக்காவும் மீண்டும் தம்மிடையே இராஜதந்திர உறவுகளை புதுப்பித்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பது குறித்து 88 வயதான முன்னாள் கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ முதல் தடவையாக தனது கருத்தை கூறியுள்ளார்.
காஸ்ட்ரோவின் கம்யூனிஸ புரட்சியை அடுத்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முறிந்துபோயிருந்தன. காஸ்ட்ரோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தான் இன்னமும் அமெரிக்காவை நம்பவில்லை என்றும், ஆனால், பிரச்சினைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதை நான் நிராகரிக்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
காஸ்ட்ரோவின் அறிக்கையைக் கொண்டு அவரது தம்பியான ராவுல் காஸ்ட்ரோவின் தலைமையிலான கியூப அரசாங்கத்தின் அணுகுமுறையை அவர் நிராகரிக்கிறார் என்றோ அல்லது வரவேற்கிறார் என்றோ கொள்ள முடியாது என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :