ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (14:21 IST)

சீனப் படைகள் விலகும் காணொளி - வெளியிட்டது இந்திய ராணுவம்

ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இந்திய மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

 
இந்தக் காணொளிகள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியிலும், அந்த ஏரியின் தெற்குக் கரையை ஒட்டியுள்ள கைலாஷ் மலைத்தொடர் பகுதியிலும் எடுக்கப்பட்டவை என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இந்திய ராணுவத்தால் மொத்தம் ஐந்து காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மலைப் பகுதிகளில் தாங்கள் அமைத்த கூடாரங்களை சீனப் படையினர் அகற்றுவது, தாங்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த மலைப் பகுதிகளில் இருந்து இறங்கி வாகனங்களை நோக்கிச் செல்வது, சீனப் படையினர் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட காணொளிகள் ஆகியவை இந்திய ராணுவத்தால் செவ்வாயன்று பகிரப்பட்டுள்ளன.
 
சீனப் படைகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் தற்காலிக அரண்களை அவர்கள் அகற்றுவதை இந்திய ராணுவத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன என்று செய்தி கூறுகிறது.