வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 14 ஜனவரி 2015 (17:51 IST)

ஷார்லி எப்டோ: புதிய பதிப்பின் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன

பிரான்சில் அரசியல் நையாண்டி பத்திரிகையின் புதிய பதிப்புக்கு மிகப்பெரிய கிராக்கி இருப்பதாக அந்நாட்டின் பத்திரிகை கடைகள் தெரிவிக்கின்றன. அச்சடிக்கப்பட்ட பிரதிகள் அனைத்துமே ஒரு சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
உயிர்தப்பியவர்களின் பதிப்பு என்று கூறப்படுகின்ற தற்போதைய பதிப்புக்கு கூடுதல் பிரதிகள் அச்சடிக்கப்படும் என அந்தப் பத்திரிகை கூறுகிறது.
 
முன்பில்லாத வகையில் ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் இந்தப் பதிப்பு அச்சடிக்கப்படுகிறது.
 
பாரிஸில் இந்தப் பத்திரிகை அலுவலகத்தில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இப்பத்திரிகையின் ஆசிரியர், கேலிச்சித்திர ஓவியர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
 
தற்போதைய புதிய பதிப்பு 16 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மொழிகளின் பதிப்பை இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
 
தற்போதைய பதிப்பின் அட்டைப் படத்தில் முகமது நபியின் சித்திரம் இடம்பெறுவதை சில முஸ்லிம் நாடுகளும் அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
 
ஆனால் வெறுப்பு மொழியை தாங்கள் பயன்படுத்தவில்லை என ஷார்லி எப்டோவின் புதிய ஆசிரியர் கூறியுள்ளார்.