பழங்கால இஸ்ரேலியர்கள் வழிபாட்டில் கஞ்சா பயன்படுத்தியது ஒரு தொல்பொருள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது வழிபாட்டின் போது கஞ்சாவை எரித்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. 2,700 ஆண்டுகள் பழமையான டெல் அராட் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
யூத வழிபாட்டு முறையில் இவ்வாறான போதைப் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. தெற்கு டெல் அவிவிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த பழங்கால கோயில் 1960ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.