செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (14:35 IST)

மலிவான விலையில் பெட்ரோல் விற்கும் நிறுவனம் - எங்கே, ஏன்?

பிரிட்டனில் ஒரு பவுண்டுக்கு பெட்ரோல் விற்கும் முதல் முக்கிய சில்லறை விற்பனை நிறுவனமாக மோரிசன் நிறுவனம் உள்ளது. 
 
இந்த நிறுவனம் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதிலும் உள்ள தங்களது பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு பவுண்டுக்கு பெட்ரோலை விற்று வருகிறது.
 
ஏப்ரல் மாதம் பிரிட்டனில் ஆங்காங்கே உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் ஒரு பவுண்டுக்கு பெட்ரோல் விற்கப்பட்டாலும், பிரிட்டன் முழுவதும் ஒரே சமயத்தில் இந்த விலையில் விற்கப்படுவது கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 50 லிட்டர் பெட்ரோல் வாங்கும் போது குறைந்தது 4.50 பவுண்டுகளை மக்கள் சேமிப்பார்கள் என்கிறது மோரிசன் நிறுவனம்.
 
சர்வதேச அளவில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெட்ரோல் விலை வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. மோரிசனை தொடர்ந்து பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.