1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (15:17 IST)

இந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள்

தென் கிழக்கு ஆசியாவில் ஆதிகால மனிதர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ஹோமோ எரக்டெஸ் எனப்படும் ஆதிகால மனிதர்கள் சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி வாழ்ந்து வந்த மனித இனம். முதன்முதலில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த மனித இனம் அவர்கள்.
 
இந்தோனீசிய தீவான ஜாவாவில், அவர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்கால மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஆதிகால மனிதர்களும் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார்கள்.
 
ஆப்பிரிக்காவில் ஆதிகால மனிதர்கள் இனம் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. சீனாவில் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன். ஆனால் இந்தோனீசிய ஜாவா தீவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை அவர்களால் எப்படி வாழ முடிந்தது என்ற கேள்விக்கும் பதில் உண்டு. 
 
ஜாவா மற்ற இடங்களை போல அல்லாமல் தனியே எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்ததால் ஆதிகால மனிதர்கள் இங்கு அதிக காலம் வரை வாழ்ந்துள்ளனர்.