1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 4 டிசம்பர் 2021 (16:36 IST)

தடுப்பூசி போடாமல் ஏமாற்ற கையில் போலி தோலுடன் வந்த இத்தாலி சுகாதார ஊழியர்

இத்தாலியில் ஒரு நபர், உண்மையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தடுப்பூசி சான்றிதழ் பெறமுயன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுமார் 50 வயதுள்ள அந்த நபர், தனக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு சிலிகான் மோல்டால் தன் கரங்களை மூடிக் கொண்டு சென்றுள்ளார்.
 
அவரது கை, சிலிகானால் மூடப்பட்டிருப்பதை கவனிக்கமாட்டார்கள் என நம்பியுள்ளார். ஆனால் தடுப்பூசி செலுத்தும் செவிலியர் ஏமாறவில்லை. அதைக் கண்டுபிடித்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார்.
 
ஏமாற்ற முயன்ற நபருக்கு தடுப்பூசி செலுத்த, அவரது கை பகுதியில் உள்ள சட்டையை நீக்கிவிட்டு கைகளைத் தொட்ட போது, அவரது தோல் ரப்பரைப் போன்றும், குளிர்ச்சியாகவும் இருந்தது. மேலும் அவரது தோலின் நிறமும் வெளிரி இருந்தது என உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் கூறினார் அச்செவிலியர்.
 
உண்மையைக் கண்டுபிடித்த பின், அதைக் கண்டும் காணாமல் இருக்குமாறு அந்த நபர் செவிலியரை கேட்டுக் கொண்டதாக லா ரிபப்ளிகா பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அச்செவிலியர், அந்த நபரின் மோசடி குறித்துக் காவல்துறையிடம் புகார் கூறினார்.
 
வடமேற்கு இத்தாலியில் உள்ள பையில்லா (Biella) காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகின்றது. உள்ளூர் அதிகாரிகள் அந்த நபரின் நடத்தையை விமர்சித்துள்ளனர்.
 
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம் ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்ட மனித உயிரிழப்புகள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் கொடுத்த விலை மற்றும் தியாகங்களை நினைவுகூரும் போது அவரது செயல் ஏற்புடையதல்ல என பெட்மான்ட் பிராந்திய அரசின் தலைவர் ஆல்பர்ட் சிரியோ ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
 
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சான்று பெற முயன்ற நபர் ஒரு சுகாதாரப் பணியாளர் என்றும், அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலேயே அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தாலி நாட்டில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
போலி கைகள், மார்புப் பகுதி, கழுத்துப் பகுதி வரை கொண்ட ஒட்டுமொத்த இடுப்புக்கு மேற்பகுதி உடலை மறைக்கும் சிலிகான் சூட், அமெசான் தளத்தில் €488 கிடைக்கிறது. ஊசி செலுத்தும் பகுதியில் கொஞ்சம் அதிக துணி வைத்தால், தடுப்பூசி செலுத்தும் போது, அதன் ஊசி முனை கூட உண்மையான உடல் பகுதியைத் தொடாத படி செய்யலாம் என ட்விட்டரில் சில பயனர்கள் பதிவிட்டிருப்பதை லா ரிபப்ளிகா செய்தித் தாள் மேற்கோள் காட்டியுள்ளது.
 
இத்தாலியில் கொரோனா தொடர்பான விதிமுறைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது. பொது ரயில் சேவை, திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று, கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது கொரோனாவிலிருந்து குணமாகி மீண்டு வந்ததற்கான சான்று ஆகியவற்றைக் காட்ட வேண்டியுள்ளது. இதை 'கொரோனா க்ரீன் பாஸ்' என்று அழைக்கிறார்கள்.
 
திங்கட்கிழமை முதல் 'சூப்பர் கிரீன் பாஸ்' கோரப்படுகிறது. இந்த வகையான பாஸ்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
 
இத்தனை கட்டுப்பாடு விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டும் இத்தாலியில் 73 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இது பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளை விட அதிகம் என்றாலும், ஸ்பெயின், போர்ச்சுகளை விட குறைவு.