புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள்...!

ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு பரிகார விருட்சங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய  மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களூம் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில்,  மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் எண்ணற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த  விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும் தெய்வீகத் தனமையும் அளப்பறியது.
 
இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனோடு இணைந்து வாழ்வதாகும். இந்த விருசங்கள் வெளியிடும் காற்றை நாம் சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விரிட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும் சர்வ சித்திகளும் அடையலாம்.
 
1. அஸ்வினி - எட்டி, 2. பரணி - நெல்லி, 3. கிருத்திகை - அத்தி, 4. ரோஹிணி - நாவல், 5. மிருகசீர்ஷம் - கருங்காலி, 6. திருவாதிரை - செங்கரு, 7. புனர்பூசம் - மூங்கில், 8. பூசம்  - அரசு, 9. ஆயில்யம் - புன்னை, 10. மகம் - ஆலம், 11. பூரம்  - பலா, 12. உத்திரம் - அரளி, 13. ஹஸ்தம் - வேல்,  14.  சித்திரை -  வில்வம், 15. ஸ்வாதி - மருதை, 16. விசாகம் - விளா, 17. அனுஷம் - மகிழம், 18. கேட்டை - பிராய், 19. மூலம் - மாமரம், 20. பூராடம் - வஞ்சி, 21. உத்திராடம் - பலா, 22. திருவோணம் - எருக்கு, 23. அவிட்டம் - வன்னி, 24. சதயம் - கடம்பு, 25. பூரட்டாதி - தேமா, 26. உத்திரட்டாதி - வேம்பு, 27. ரேவதி -  இலுப்பை.