1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (13:17 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (சிம்மம்)

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
சுக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக  அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியைப் பொருத்தவரை நீண்டநாட்களாக இருந்த கடன்கள் அடைக்கப்  படுவீர்கள்.
 
குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம்.
 
தொழில் - வியாபாரத்தில் ஏற்றுமதி -  இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும். உங்களுக்கு தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால் உங்கள் நிலையும் உயரும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கடன் வாங்கியிருந்தால் அதை வரும் காலங்களில் அதை  திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள்.  கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திருப்பி கிடைக்கும்.
 
மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மேற்படிப்பு விசயங்கள்  தள்ளிப் போய்க் கோண்டிருந்ததல்லவா இப்போது அது சரியாகி உங்கள்  கல்வியைத் தொடர அழைப்புகள் வரும். அரசியல்துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள். கலைத்  துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு  ஆதரவு தருவார்கள்.
 
மகம்: இந்த குரு பெயர்ச்சியில் வாய்ப்புகள் நல்லபடி அமைந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி சூழ்நிலை ஏற்படும். உங்கள் இல்லத்தில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும். களவு போக வாய்ப்புள்ளது.
 
பூரம்: இந்த குரு பெயர்ச்சியில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கவனச் சிதறல்கள் வந்து போகும். தேவையற்ற மனக் குழப்பமும், சஞ்சலமுமே  உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபாடு ஒன்று தான் தக்க தீர்வாக அமையும்.
 
உத்திரம் 1ம்-பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் முற்பகுதி அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். பிற்பாதியில் சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்  பட நேரலாம். ஆதலால் மனசோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் கால கட்டம். .
 
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.