வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:07 IST)

கன்னி - மார்கழி மாத பலன்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்கிரன்  - தைரிய, வீர்ய  ஸ்தானத்தில் குரு, புதன்  - சுக ஸ்தானத்தில் சூர்யன், சனி -  பஞ்சம பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
அடுத்தவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படும் கன்னி ராசியினரே இந்த மாதம் பொருள் வரத்து அதிகரிக்கும்.  கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து  முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப்  பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது.
 
தொழில்துறையாளர்களுக்கு காலகட்டம் முழுக்கவே பணி இருக்கும். வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
 
அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி தொண்டர்களிடம் அதிக  நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள். 
 
பெண்மணிகள் தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். 
 
மாணவமணிகள் படிப்பில் முன்னேறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி  கற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக அமையும்.
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள்  மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும்.
 
அஸ்தம்:
 
இந்த மாதம் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில்  அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த  பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும்.
 
சித்திரை 1, 2, பாதம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி  இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான  சூழ்நிலைகள் மாறும். 
 
பரிகாரம்: புதன்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும். எலுமிச்சை மாலையை  புதன்தோறும் அம்மனுக்கு அர்ப்பணித்து வழிபடவும். அவளின் அருட்கண்பார்வையால் எல்லாக் காரியங்களும்  தங்கு தடையின்றி நடைபெறும்.
 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
சந்திராஷ்டம தினம்:  டிசம்பர் 18, 19 
அதிர்ஷ்ட தினம்: ஜனவரி 7, 8, 9.