வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:01 IST)

சிம்மம் - மார்கழி மாத பலன்கள்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன்  - சுக ஸ்தானத்தில் குரு, புதன்  - பஞ்சம பூர்வ,  புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சனி - ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராகு ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
 
போராட்டங்களை பற்றி கவலைப்படாமல் வெற்றியையே குறிக்கோளாக கொண்டு செயல்படும்  சிம்ம ராசியினரே இந்த மாதம் எதிலும்  கவனமாக இருப்பது நல்லது.  சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.

நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள்  ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது  சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த  மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். வருமானம் சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். மற்றபடி எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன்  செயல்படவும்.
 
வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள்.  பெரிய கடன்களிலிருந்து விடுபடும் காலகட்டமிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.  வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும். அவர்களின் தேவைகளைத் தக்கபடி பூர்த்தி செய்யவும். கட்சிக்கு நலம் சேர்க்கும் பிரச்சாரங்களில் மட்டுமே ஈடுபடவும். மற்றபடி கட்சியின் புதிய  கொள்கைகளைப் பிரபலப்படுத்துவீர்கள். கட்சியில் உங்கள் புகழும், செல்வாக்கும் உயரும். 
 
கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் தகுதிக்குக் குறைவானவர்களிடம் நட்பு வேண்டாம். 
 
பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் திருப்திகரமாக  இருக்கும். உங்கள் பேச்சை உற்றார், உறவினர்கள் கேட்டு நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 
 
மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். பொறுமையுடன் பதற்றப்படாமல்  படிக்கவும். தற்போது நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் எதிர்காலத்திற்கு சிறப்பான அடித்தளமாக அமையும். 
 
மகம்:
 
இந்த மாதம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல்  அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும்.
 
பூரம்:
 
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும்.  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி  சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி  மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு  தேடிவரும்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல  திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில்  நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். 
 
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள காலபைரவரை வணங்குங்கள். வில்வ இலையை சிவனுக்கு  அர்ப்பணித்தால் அனைத்து காரியங்களும் தடையின்றி நடக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டம தினம்: ஜனவரி 12, 13, 14  டிசம்பர் 16, 17  
அதிர்ஷ்ட தினம்: ஜனவரி 5, 6.