1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:34 IST)

ரிஷபம்: ஆவணி மாத ராசி பலன்கள்

கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம் - நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷபராசியினரே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர்.

இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி  சுக்கிரன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை  சுலபமாக சமாளிக்கும் திறமை வந்து சேரும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. 
 
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது  நல்லது. 
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  ராசிக்கு இரண்டில் செவ்வாய் பார்வை இருப்பதால் கணவன், மனைவிக்கிடையில்  வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். 
 
பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 
 
மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. 
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது. புதிய  வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தாண பக்கியமும் கிட்டும். 
 
ரோகிணி: என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள்.  எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும். 
 
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 21, 22, 23
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 09, 10
 
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.