முக்கியத்துவம் பெற்ற ஆடி அமாவாசை

அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது. இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும்  சிறப்புடையது.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
 
சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா். அனேகா் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி  தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா். 
 
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
 
நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர்  ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதுர்கள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும். பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர  சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
 
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
 
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :