திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (17:27 IST)

ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - ரிஷபம்

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சுகஸ்தானத்தில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். அஷ்டமத்து சனி நடந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார்கள். அதன் மூலம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் சுக்கிரன் - லாபாதிபதி குரு - தொழில் அதிபதி சனி ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்ப ஸ்தானாதிபதி புதன் பாக்கியஸ்தானத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். 

மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

உடல்நலத்தைப் பொறுத்தவரை சோம்பேறித்தனம் அதிகமாகலாம். கவனம் தேவை.

கார்த்திகை:
இந்த மாதம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 
ரோகினி:
இந்த மாதம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் செலவுகளைப் பற்றி கவலைப்படுவீர்கள்: ஆடம்பர செலவுகள் வேண்டாம். சகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் மாதமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16