வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (09:39 IST)

செப்டம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

செப்டம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்:  ரிஷபம்
 
கிரகநிலை:
ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 13ம் தேதி புத பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம்.
இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
 
நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷப ராசியினரே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ராசிக்கு 2ல் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
 
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.
 
கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். 
 
பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
 
கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். 
 
அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.
 
மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
 
கார்த்திகை - 2, 3, 4:
இந்த மாதம் எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும். 
 
ரோகினி:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். 
 
மிருகசீரிடம் - 1, 2:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9