1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (15:28 IST)

செப்டம்பர் 2021 - 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். கலைத்துறையினருக்கு யாரையும் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமை  அன்று ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கையை தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.