புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (16:14 IST)

அக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் புதன், சந்திரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-10-19 அன்று மாலை 06.20 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வாழ்க்கையில் மாற்றத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் நன்மையை அளிக்கும் அமைப்பாகும். எதையும் உடனடியாக நம்பாமல் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்க கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை செவி மடுத்து கேட்பார்கள். அவர்களுக்காக நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

அஸ்வினி:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.

பரணி:
இந்த மாதம் தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். மாணவர்கள் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமான வீண் மனக்கவலை  உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை அன்று பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்:  24, 25