1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:05 IST)

அக்டோபர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்!

Monthly astro
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
06-10-2024 அன்று புதன் தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து சுக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
14-10-2024 அன்று சுக்கிரன்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
17-10-2024  அன்று சூர்யன் தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து சுக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2024 அன்று செவ்வாய் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
25-10-2024 அன்று புதன் தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து சுக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப்பெற்ற கடகராசியினரே

இந்த மாதம் மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும்.  பணவரத்தும் திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்திரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணாமல் இருப்பதற்கு கவனமாக இருப்பது நல்லது. 

குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள்  உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. 

கலைத் துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும்.

அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அன்னை பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8