1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
  4. November month astrology prediction

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

நவம்பர் 2021
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
 
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
மிக எளிதில் எதிலும் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய திறமை மிகுந்த கன்னி ராசியினரே இந்த மாதம் காரியங்கள் வெற்றியை தரும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசிஎதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும்.
 
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர் களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
 
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
 
பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
 
பரிகாரம்: திருப்பதி பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கை யில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்