வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sasikala

மே மாத ஜோதிட பலன்கள் 2021: தனுசு

கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (அதி. சா) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
தனது நேர்மையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தனுசு ராசியினரே இந்த  மாதம்  பணவரத்து அதிகரிக்கும்.. எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த  தாமதம் நீங்கும். 
 
தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமெடுக்கும். பங்குதாரர்களிடம் இருந்து  வந்த பிரச்சனைகள் அகலும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள்  அனுசரனையுடன் இருப்பார்கள். 
 
பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.
 
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில்  புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு  சீராகவே தொடரும்.
 
மூலம்:
இந்த மாதம் நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது. 
 
பூராடம்:
இந்த மாதம் சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். சகஊழியர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன்  சமாளிப்பீர்கள். 
 
உத்திராடம்:
இந்த மாதம் எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக  செலவழிக்கவும்.
 
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று சித்தர்களை வணங்க வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11.