1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
  4. June month astrology prediction

ஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

ஜூன் 2020
தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில்  கேது, சனி (வ) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, சுக்ரன் (வ), புதன்  - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
எந்த சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் திறன் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.
 
குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
 
கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 
 
அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். 
 
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.
 
மூலம்:
இந்த மாதம் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். 
 
பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
 
உத்திராடம்:
இந்த மாதம் உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
 
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25,
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்