திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (18:36 IST)

ஜனவரி மாத பலன்: கன்னி

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.

வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.

அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.  பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது.

கலைத்துறையினர் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். இசைக்கலைஞர்கள் பாராட்டு பெறுவார்கள். 

மாணவர்கள் மெக்கானிக்கல் பயிற்சிபெறும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும்.

உத்திரம்:
இந்த மாதம் செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

சித்திரை:
இந்த மாதம் வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்:  15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9