1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
  4. January month astrology prediction

ஜனவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

ஜனவரி 2022
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன், ராகு - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று லாப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
23-01-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் கடக ராசியினரே இந்த மாதம் தனாதிபதி சூரியன் மூலம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள்  தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும்.  பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.   நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

பூசம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

ஆயில்யம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தேதி: 24, 25
அதிர்ஷ்ட தேதி: 17, 18, 19
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்