திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:40 IST)

ஜனவரி 2022 - புத்தாண்டு பலன்கள்: கடகம்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

 
கடக ராசி அன்பர்களே இந்த மாதம் ராசியை தைரிய விரையாதிபதி புதன் - சுக லாபாதிபதி சுக்கிரன் - சனி ஆகியோர் பார்க்கிறார்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
 
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். 
 
பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.
 
கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
 
மாணவர்களுக்கு புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.
 
புனர்பூசம் 4:
தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரம் ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம்.  மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
 
பூசம்:
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். 
 
ஆயில்யம்:
காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
 
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  2, 4, 6
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28